சினிமா செய்திகள்

ரசிகர்கள், பேனர் வைக்க தனுஷ் தடை + "||" + Dhanush bans fans from putting banner

ரசிகர்கள், பேனர் வைக்க தனுஷ் தடை

ரசிகர்கள், பேனர் வைக்க தனுஷ் தடை
சென்னையில் பேனர் விழுந்து இளம் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு பிறகு பேனர் கலாசாரத்தை ஒழிக்க குரல்கள் ஒலிக்கின்றன. அரசியல் கட்சிகள் பேனர்களை தவிர்க்கும்படி தொண்டர்களை வற்புறுத்தி உள்ளன.
முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீசாகும்போது ரசிகர்கள் பேனர் கட்-அவுட்கள் வைத்து அமர்க்களப்படுத்துவது உண்டு. பாடல் வெளியீட்டு விழாக்களிலும் கட்-அவுட்கள் அமைக்கின்றனர். திருமணம், மற்றும் பிறந்த நாள் விழாக்களின்போதும் நடிகர்கள் படங்களுடன் சாலைகளில் பிரமாண்ட பேனர்களை வைக்கின்றனர். இதுபோல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் ரசிகர்களுக்கு தடை விதித்தனர்.

விஜய் வேண்டுகோளை ஏற்று சென்னையில் சமீபத்தில் நடந்த பிகில் பட பாடல் வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் பேனர் வைக்கவில்லை. அஜித்குமார் ரசிகர்களும் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டினர். இந்த நிலையில் தனுசும் தனக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

தனுஷ் வேண்டுகோளை ஏற்று அவரது ரசிகர் மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தனுஷ் நடிப்பில் அக்டோபர் 4-ந்தேதி வெளியாக இருக்கும் அசுரன் படத்துக்கு கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக உங்களால் முடிந்த அளவு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தனுஷ் ஜோடியாக ஹன்சிகா
தனுஷ் ஜோடியாக ஹன்சிகா நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. தனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’
தனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’ செய்யப்பட உள்ளது.
3. பெயர் வைக்கும் முன்பே வியாபாரம் ஆனது!
தனுஷ் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதன் காரணமாக அவருடைய ‘மார்க்கெட்’ நிலவரம் உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
4. பாடலை வெளியிட்டார், தனுஷ்!
சுப்பிரமணியம் சிவா இயக்க, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆத்மியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘வெள்ளை யானை’ படத்தின் கதை, முழுக்க முழுக்க விவசாயிகள் தொடர்பான கதை.