சினிமா செய்திகள்

மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா? + "||" + Suriya in the Bala direction again?

மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா?

மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா?
கே. வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்‘ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் வசூல் திருப்தியாக உள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் நல்ல வசூல் பார்த்துள்ளது. தற்போது சூரரை போற்று என்ற படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

இந்த படத்தை மாதவனை வைத்து இறுதி சுற்று படத்தை எடுத்து பிரபலமான சுதா கொங்கரா டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்தை முடித்து விட்டு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது. தொடர்ந்து பாலா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலா இயக்கிய நந்தா சூர்யாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய முதல் படம். அவரது முழு நடிப்பு திறமையும் இதில் வெளிப்பட்டது. அதன்பிறகு தான் படங்கள் குவிந்தன. பாலா இயக்கிய பிதாமகன் படத்திலும் நடித்தார். இப்போது மூன்றாவது முறையாக பாலா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகர்களை கொண்ட கதையம்சம் உள்ள படம் என்றும் தகவல்.

சூர்யாவோடு ஆர்யா, அதர்வா ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தயாரிப்புக்கு முந்தைய வேலைகள் நடந்து வருகின்றன. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சூர்யா, மிஷ்கின், வெங்கட்பிரபுவின் அயன், அஞ்சாதே, சென்னை-28 அடுத்த பாகங்கள்?
சூர்யா, மிஷ்கின், வெங்கட்பிரபுவின் அயன், அஞ்சாதே, சென்னை-28 அடுத்த பாகங்கள் எடுப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2. ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் உதவி
‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்தனர்.
3. ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்!
திறமையான நடிகர்கள் மற்றும் சிறந்த டைரக்டர்களை அழைத்து, அவர்களை மனம் திறந்து பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார், சூர்யா.
4. சர்ச்சையில் சூர்யாவின் ‘அருவா’ தலைப்பு
சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
5. தீபாவளி விருந்தாக சூர்யா-ஹரி இணையும் 6-வது படம், `அருவா’
சூர்யா-ஹரி இணைந்து பணிபுரியும் 6-வது படத்துக்கு, `அருவா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.