சினிமா செய்திகள்

பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் + "||" + 3 movies conflict Pongal release

பொங்கலுக்கு மோதும் 3 படங்கள்

பொங்கலுக்கு மோதும் 3 படங்கள்
பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் திரையிடும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஆனாலும் அது நடைமுறையில் இல்லை என்று சிறுபட தயாரிப்பாளர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகிறார்கள்.


வருகிற தீபாவளி, பொங்கல் பண்டிகையில் எந்தெந்த படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்கள் ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளனர்.

பொங்கல் பண்டிகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் தர்பார் படம் ரிலீசாவதை உறுதிப்படுத்தி உள்ளனர். வட மாநிலங்களில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொங்கலுக்கு தர்பார் மட்டுமே வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விஷால், கார்த்தி படங்களும் மோத தயாரா கின்றன.

பொங்கலுக்கு வெளியாகும் விஷால் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆனந்த் இயக்குகிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கார்த்தி படத்துக்கும் பெயர் வைக்காமலேயே படப் பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ஜோதிகாவும் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனை வைத்து பாபநாசம் படத்தை இயக்கி பிரபலமான ஜீத்து ஜோசப் டைரக்டு செய்கிறார். கடந்த பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய 2 படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.