சினிமா செய்திகள்

படக்குழுவினர் 150 பேருக்கு நடிகர் சூர்யா தங்க காசுகள் பரிசு + "||" + Actor Surya gave gold coins to 150 members of the film crew

படக்குழுவினர் 150 பேருக்கு நடிகர் சூர்யா தங்க காசுகள் பரிசு

படக்குழுவினர் 150 பேருக்கு நடிகர் சூர்யா தங்க காசுகள் பரிசு
சூர்யாவின் ‘காப்பான்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தொடர்ந்து சூரரை போற்று படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கினார்.
மாதவன் நடித்து வெளிவந்து வசூல் குவித்த இறுதி சுற்று படத்தை டைரக்டு செய்து பிரபலமானவர்  சுதா கொங்கரா. சூரரை போற்று படத்தில் கதாநாயகியாக அனுபமா பாலமுரளி நடித்துள்ளார்.

ஜாக்கி ஷராப், கருணாஸ், மோகன்பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையிலும், ஐதராபாத்திலும் நடந்தன. டெல்லியில் சண்டை காட்சிகளை படமாக்கினர். மதுரையிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இதையொட்டி படப்பிடிப்பு இறுதி நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் சூர்யா பரிசுகள் வழங்கினார். படக்குழுவை சேர்ந்த மொத்தம் 150 பேருக்கு தலா ஒரு பவுன் தங்க காசுகளை அவர் பரிசாக வழங்கி இருக்கிறார். அவற்றை பெற்றுக்கொண்ட துணை நடிகர்- நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அடுத்து கார்த்தி நடித்த சிறுத்தை, அஜித்குமாரை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. பாலா, ஹரி ஆகியோரும் சூர்யாவிடம் கதை சொல்லி இருக்கிறார்கள். இதில் யாருடைய படத்தில் முதலில் நடிப்பார் என்று இன்னும் முடிவாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியீடு
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
2. “அதிகாலை பயணத்தை தவிர்த்து விடுங்கள்” நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்
“கட்டுப்பாட்டை மீறி விபத்துகள் நடப்பதால், அதிகாலை பயணத்தை தவிர்த்து விடுங்கள்” என்று நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
3. “பேனர்கள் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள்” ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்
பேனர்கள் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.