சினிமா செய்திகள்

எனது தந்தையிடம் “சொத்தில் பங்கு கேட்டது இல்லை” - நடிகை சுருதிஹாசன் + "||" + I am never asked for a share in the My father's property - actress Surthi Hassan

எனது தந்தையிடம் “சொத்தில் பங்கு கேட்டது இல்லை” - நடிகை சுருதிஹாசன்

எனது தந்தையிடம் “சொத்தில் பங்கு கேட்டது இல்லை” - நடிகை சுருதிஹாசன்
சுருதிஹாசன் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். டிரட்ஸ்டோன் என்ற அமெரிக்க டி.வி தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“வாழ்க்கையை சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதிக செலவு செய்யும் பழக்கம் எனக்கு இருந்தது. அதன்பிறகு பண தேவைக்காக வேலை செய்தேன். ஆனாலும் ஆத்ம திருப்தி இல்லை. மகிழ்ச்சியாக வாழ வங்கியில் பணம் இருந்தால் மட்டும் போதாது என்று புரிந்தது. இருக்கிற கதாநாயகிகளை ஒப்பிடும்போது எனது சம்பாத்தியம் குறைவுதான்.

நான் பெரிய நட்சத்திரம் இல்லை. எனது அப்பா சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போட்டார். சாதரணமாக சம்பாதித்த பணத்தை வைத்து சொத்து வாங்குவார்கள். ஆனால் எனது தந்தை ராஜ்கமல் பட நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரித்தார். அவருக்கு சினிமாதான் மூச்சு.

உங்களுக்கு ஏதாவது மிச்சம் வைத்து இருக்கிறாரா? சொத்தில் எங்கள் பங்கு எவ்வளவு என்று நானும், எனது தங்கையும் கேட்ட சந்தர்ப்பங்கள் உண்டா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. என் குழந்தை பருவம் மகிழ்ச்சியானது. அப்பா சென்னையில் ஒரு பள்ளியில் படிக்க வைத்தார். அதன்பிறகு அமெரிக்காவில் நல்ல கல்லூரியில் சேர்த்தார்.

நல்ல உணவு, நல்ல உடைகள், விலை மதிப்பில்லா கார், நல்ல வீடு என்று எல்லாவற்றிலும் சிறப்பானதை கொடுத்தார். 21 வயதிலேயே நான் கதாநாயகியாக நடித்து சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேன். அதன்பிறகு அப்பாவிடம் இருந்து பணம் வாங்குவதை நிறுத்தி விட்டேன். இதுவரை அப்பா சொத்தில் எனது பங்கு என்ன என்று கேட்டது இல்லை.

எனக்கு தேவையான சொத்துகளை நானே சம்பாதித்து கொள்வேன். நாளை எனது குழந்தைகளுக்கும் இதையே கற்றுக்கொடுப்பேன். பெற்றோர் கொடுப்பதை கொடுப்பார்கள். ஆனால் நாமும் சம்பாதிக்க முயற்சி செய்ய வேண்டும்.”

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அப்பா என்னை ஒரு போதும் தண்டிக்கவில்லை - சுருதிஹாசன்
அப்பா என்னை ஒரு போதும் தண்டனையும் தந்ததில்லை, தண்டிக்கவில்லை என சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.