சினிமா செய்திகள்

விஜய் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம்? + "||" + Play the villain role in the vijay movie Rs 10 crore salary for Vijay Sethupathi?

விஜய் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம்?

விஜய் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம்?
அட்லி இயக்கத்தில் விஜய் தந்தை, மகனாக இரு வேடங்களில் நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்துள்ளனர்.
விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

இது விஜய்க்கு 64-வது படம் ஆகும். ஏற்கனவே மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. கதாநாயகியாக நடிக்க ராஷிகன்னா, ராஷ்மிகா மந்தனா பெயர்கள் அடிபட்டன. இந்தி நடிகை கியாரா அத்வானியிடமும் பேசி வருகிறார்கள்.

அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சில முன்னணி இந்தி நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டனர். அவர்களிடம் கால்ஷீட் இல்லாததால் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவருக்கு கதை பிடித்துள்ளதால் வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்று படக்குழுவினர் நம்புகின்றனர். ஏற்கனவே ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது அவர் கதாநாயகனாக நடிப்பதற்கு இணையான சம்பளம் என்கின்றனர். ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இதை உறுதிப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ரசிகர்களை பாராட்டினார்!
முன்னணி கதாநாயகர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பெயரில் உள்ள ரசிகர் மன்றங்களை ஊக்குவித்து வருகிறார்கள். அவர்கள் வரிசையில் புதுசாக, விஜய்சேதுபதியும் இணைந்து இருக்கிறார்.
2. நீண்ட தலைமுடியுடன் வைரலாகும் விஜய் சேதுபதி தோற்றம்
விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம் வேதா, பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.
3. அரசியலுக்கு தயார்!
விஜய் சேதுபதிக்கு அரசியலில் ஆர்வம் இருப்பதாக தெரிகிறது. முதல்கட்டமாக, அவர் பெயரில் ரசிகர் மன்றங்கள் தொடங்கும் நபர்களை ஊக்குவித்து வருகிறார்.
4. விஜய் சேதுபதி, நயன்தாராவின் சரித்திர படம் டிரெய்லர்
விஜய் சேதுபதி, நயன்தாராவின் சரித்திர படம் டிரெய்லர்
5. காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக விஜய் சேதுபதி கருத்து
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை விஜய் சேதுபதி சாடியுள்ளார்.