சினிமா செய்திகள்

பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் காலமானார் + "||" + Famous writer Maharishi Passed away due to ill health

பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் காலமானார்
பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் சேலத்தில் காலமானார்.
சேலம்,

தஞ்சாவூரில் பிறந்த மகரிஷி நாவல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இவர் 130 புதினங்கள் 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரைகள் என 250க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். புவனா ஒரு கேள்விக்குறி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வட்டத்துக்குள் சதுரம், நதியை தேடி வந்த கடல் உள்ளிட்ட திரைப்படங்களின் கதையாசிரியராகவும் இருந்தவர் மகரிஷி.

மகரிஷி 'என்னதான் முடிவு' திரைப்படத்திற்காக சிறந்த கதையாசிரியர் விருது பெற்றவர் ஆவார். 87 வயதாகும் மகரிஷி உடல்நலக்குறைவால் சேலத்தில் இன்று காலமானார்.