சினிமா செய்திகள்

என்னுடன் ஜோடிசேர மறுக்கும் கதாநாயகிகள் நடிகர் அப்புகுட்டி வருத்தம் + "||" + The heroines who refuse The actor Appukkutty is upset

என்னுடன் ஜோடிசேர மறுக்கும் கதாநாயகிகள் நடிகர் அப்புகுட்டி வருத்தம்

என்னுடன் ஜோடிசேர மறுக்கும் கதாநாயகிகள் நடிகர் அப்புகுட்டி வருத்தம்
சுசீந்திரன் இயக்கிய ‘அழகர் சாமியின் குதிரை’ படத்தில் கதாநாயகனாக நடித்து தேசிய விருது பெற்றவர் அப்புகுட்டி.
வீரம் படத்தில் அஜித்குமாரின் உதவியாளராக நடித்து மேலும் பிரபலமானார். பல படங்களில் நகைக்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது ‘வாழ்க விவசாயி’ என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.


இதில் அவருக்கு ஜோடியாக வசுந்தரா வருகிறார். பி.எல்.பொன்னி மோகன் டைரக்டு செய்துள்ளார். கதிர் பிலிம்ஸ் சார்பில் பால் டிப்போ கதிரேசன் தயாரித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் அப்புகுட்டி கலந்து கொண்டு பேசியதாவது:-

“நான் நடித்த படம் மேடையிலேயே வியாபாரம் ஆகியிருக்கிறது. இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி விடுவேன். விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குநர் விவரிக்கும் போது இந்தப் படத்தின் கதையை விடக்கூடாது என்று எண்ணி, ஒப்புக்கொண்டேன். என்னுடன் நடிப்பதற்கு கதாநாயகிகள் தயங்குகிறார்கள்.

நான் நடிகனில்லையா? என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா? இந்த நிலையிலும் என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை மனதார பாராட்டுகிறேன். வாழ்க விவசாயி படம் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுக்கும்.” இவ்வாறு அப்புகுட்டி பேசினார்.

விழாவில் ரவீந்திரன் சந்திரசேகரன், இயக்குனர்கள் சுசீந்திரன், ராசி அழகப்பன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி ஜி. சேகரன், டி.சிவா, இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.