சினிமா செய்திகள்

நடிகர் விஜயுடன் இணைகிறார் விஜய் சேதுபதி-அதிகாரபூர்வ அறிவிப்பு + "||" + Vijay Sethupathi joins Vijay - Official announcement

நடிகர் விஜயுடன் இணைகிறார் விஜய் சேதுபதி-அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் விஜயுடன் இணைகிறார் விஜய் சேதுபதி-அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும்  ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளதாக கூறப்படுகின்றது.

'பிகில்' படத்திற்குப் பின் 'மாநகரம், கைதி' படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். தற்போது தளபதி 64 என்றழைக்கப்படும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். அக்டோபர் முதல் வாரம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. எனவே அதற்கான நடிகர்கள் தேர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் உடன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது படக்குழுவினர், நடிகர் விஜய் சேதுபதி தளபதி 64 படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்பாக நடிகர் விஜய் சேதுபதி பேட்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தயாரிப்பாளர் மாறவில்லை!
‘பிகில்’ படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில், புதிய படத்தில் நடிக்கிறார். இது, அவர் நடிக்கும் 64-வது படம்.
2. விஜய் நடித்த `பிகில்', தீபாவளிக்கு உறுதி
விஜய் நடித்து, அட்லி இயக்கிய ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வருவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார்.
3. பிகில் படக்குழு வெளியிட்ட விஜய், நயன்தாராவின் புதிய ‘போஸ்டர்’
பிகில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
4. விஜய் படப்பிடிப்பு தொடங்கியது
விஜய்க்கு 64-வது படம். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
5. பிகில் விழாவுக்கு எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது? கல்லூரி நிர்வாகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்பு
பிகில் விழாவுக்கு எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது? என கல்லூரி நிர்வாகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.