சினிமா செய்திகள்

முதல் தடவையாக ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ கதாபாத்திரத்தில் நடிகை + "||" + For the first time ever James Bond 007 Actress in character

முதல் தடவையாக ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ கதாபாத்திரத்தில் நடிகை

முதல் தடவையாக ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ கதாபாத்திரத்தில் நடிகை
ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் லஷானா லின்ச் ஜே ம்ஸ் பாண்ட் ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதன் வரிசையில் 25-வது படம் தயாராகிறது.
இதில் ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார். இதுவரை நான்கு தடவை இந்த வேடத்தை ஏற்று நடித்துள்ள அவருக்கு இது ஐந்தாவது படம்.

இது தனது கடைசி படம் என்றும் இனிமேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மாட்டேன் என்றும் அவர் அறிவித்து உள்ளார். இந்த படத்துக்கு ‘நோ டைம் டூ டை’ என்று பெயர் வைத்துள்ளனர். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஏற்கனவே நான்கு முறை ஜேம்ஸ் பாண்டாக நடித்து இருந்த பியர்ஸ் ப்ரோஸ்னன் கூறும்போது, “இனிமேல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஒரு பெண்தான் நடிக்க வேண்டும்” என்றார்.


இந்த நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்துக்கு நடிகை லஷானா லின்ச் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் கேப்டன் மார்வல் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்தவர். தற்போது தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் இவர் நடிக்கும் சில காட்சிகள் உள்ளன. அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஹாலிவுட்டில் பெண்களை மையப்படுத்தி அதிக படங்கள் வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு லஷானாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.