சினிமா செய்திகள்

படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித்தின் புதிய படங்கள் + "||" + Vijay is ready to shoot New pictures of Ajith

படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித்தின் புதிய படங்கள்

படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித்தின் புதிய படங்கள்
‘பிகில்’ படத்தை முடித்து விட்டு புதிய படத்தில் நடிக்க விஜய் தயாராகி உள்ளார். இந்த படத்தை மாநகரம், கைதி படங்களை இயக்கி பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இதில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானி, மாளவிகா மோகனன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. தற்போது படத்துக்கான லொகேஷன் பார்க்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்தின் முக்கிய காட்சிகளை ராமேசுவரத்தில் படமாக்குகின்றனர்.


அங்கு படப்பிடிப்பு நடத்த உள்ள இடங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜும், அவரது குழுவினரும் நேரில் சென்று பார்த்தனர். அந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இது விஜய்க்கு 64-வது படமாகும். படத்தை அடுத்த வருடம் கோடையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. இது அஜித்துக்கு 60-வது படமாகும். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மங்காத்தா, ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தொடர்ந்து மீண்டும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்காக நரை முடியை கருப்பாக்கி இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். படப்பிடிப்புக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.