சினிமா செய்திகள்

‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்11 தோற்றங்களில், யோகி பாபு + "||" + Yogi Babu in 11 appearances

‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்11 தோற்றங்களில், யோகி பாபு

‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்11 தோற்றங்களில், யோகி பாபு
யோகி பாபு 11 தோற்றங்களில் ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில் நடிக்கிறார்.
பல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி, ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இதில், யோகி பாபு 11 தோற்றங்களில் வந்து காதலர்களை சேர்த்து வைக்க துடிப்பது போல் நடித்துள்ளார்.

இந்த படத்தில், கதாநாயகனாக ராம்சுந்தர்அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்து இருக்கிறார். இவர்களுடன் தம்பிராமய்யா, டைரக்டர் புகழ்மணி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார்.

படத்தின் கதாசிரியர் வி.சி.குகநாதன் கூறிய தாவது:-

“இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். காதலர்களை சேர்த்து வைக்கும் குழலூதும் கண்ணனாக யோகி பாபுவும், அவருக்கு எதிராக காதலர்களை பிரித்து வைப்பவராக மொட்டை ராஜேந்திரனும், மலையாள மந்திரவாதியாக இமான் அண்ணாச்சியும் நடித்துள்ளனர்.

படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.”