சினிமா செய்திகள்

மர்மங்கள் நிறைந்த திகில் படத்தில்துப்பறியும் நிபுணராக விதார்த் + "||" + Detective expert Vidharth

மர்மங்கள் நிறைந்த திகில் படத்தில்துப்பறியும் நிபுணராக விதார்த்

மர்மங்கள் நிறைந்த திகில் படத்தில்துப்பறியும் நிபுணராக விதார்த்
துப்பறியும் நிபுணராக விதார்த் நடிக்கிறார்.
கூத்துப்பட்டறை கலைஞனாக வாழ்க்கையை ஆரம்பித்தவர், நடிகர் விதார்த். நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கதாநாயகர்களில் இவரும் ஒருவர். இவர் தற்போது தரமான கதையம்சம் உள்ள ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

இது, மர்மங்கள் நிறைந்த திகில் படம். இந்த படத்தில், துப்பறியும் நிபுணராக விதார்த் நடிக்கிறார். புது டைரக்டர் மனோஜ் ராம் இயக்க இருக்கிறார். இவர், டைரக்டர் சக்தி சவுந்தரராஜனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். படத்தை பற்றி இவர் சொல்கிறார்:-

“இந்த படத்தின் திரைக்கதை தமிழுக்கு முற்றிலும் புதுசாக இருக்கும். முழுக்க முழுக்க மர்மங்கள் நிறைந்தது. ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். சமகாலத்தில் உள்ள ஒரு முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து, திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

விதார்த்தின் நண்பனாக சென்ட்ராயன் நடிக்கிறார். சங்கிலி முருகன், ‘ஆடுகளம்’ நரேன் ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்களில் வருகிறார்கள். விதார்த்தின் மனைவியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன்: சந்தோஷ். தயாரிப்பு: பிரேம்நாத்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற இருக்கிறது.”