சினிமா செய்திகள்

3 கதாநாயகிகளுடன்கதாநாயகன்-வில்லனாக ஸ்ரீகாந்த்! + "||" + Srikanth as the hero-villain

3 கதாநாயகிகளுடன்கதாநாயகன்-வில்லனாக ஸ்ரீகாந்த்!

3 கதாநாயகிகளுடன்கதாநாயகன்-வில்லனாக ஸ்ரீகாந்த்!
கதாநாயகன் மற்றும் வில்லனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கிறார்.
‘ரோஜாக்கூட்டம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர் வெற்றி படங்களில் நடித்து, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர், ஸ்ரீகாந்த். அடுத்து இவர், ‘மிருகா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ‘மிருகா’ படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி ஸ்ரீகாந்த் கூறுகிறார்:-

“இந்த கதையில், எனக்கு நல்லவன், கெட்டவன் என 2 குணாதிசயங்களை கொண்ட வேடம். என் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரம். இதில் என்னை ஒரு புது பரிமாணத்தில் பார்க்கலாம். என் உடல் மொழி, வசனம் பேசும் விதம் என்று அனைத்தும் புதிதாக இருக்கும்.

என்னுடன் ராய் லட்சுமி மற்றும் 2 அறிமுக நாயகிகள் நடிக்கிறார்கள். மூன்று பேருமே சரிசமாக திறன் பட பணியாற்றி வருகிறார்கள். புலி, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. அது தொடர்பான காட்சிகளை ‘அனிமேஷன்’ செய்து இருக்கிறார்கள்.

கடை-திரைக்கதை-ஒளிப்பதிவு பொறுப்புகளை எம்.,வி.பன்னீர்செல்வம் ஏற்றுள்ளார். பார்த்திபன் டைரக்டு செய்கிறார். பி.வினோத் ஜெயின் தயாரித்து வருகிறார்.”