சினிமா செய்திகள்

தர்பார் படப்பிடிப்பில் மனைவி லதாவுடன், ரஜினிகாந்த் + "||" + In the shooting of Durbar With his wife Lata, Rajinikanth

தர்பார் படப்பிடிப்பில் மனைவி லதாவுடன், ரஜினிகாந்த்

தர்பார் படப்பிடிப்பில் மனைவி லதாவுடன், ரஜினிகாந்த்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். படப்பிடிப்பு காட்சிகளை சிலர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி அதிர்ச்சி ஏற்படுத்தினர்.


இதன்மூலம் ரஜினி தோற்றங்கள் கசிந்து விட்டன. தற்போது செல்போன்களை படப்பிடிப்பு அரங்குக்குள் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். சமீபத்தில் மும்பையில் பெய்த கனமழையால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினார்கள்.

சிறிது இடைவெளிக்கு பிறகு தர்பார் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. மும்பை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். ரஜினிகாந்தும் கதாநாயகியாக வரும் நயன்தாராவும் இதில் பங்கேற்று நடித்து வருகிறார்கள். பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில் யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் (நவம்பர்) முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு படம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் தர்பார் படப்பிடிப்பு அரங்குக்குள் சென்று ரஜினியை அவரது மனைவி லதா சந்தித்துள்ளார். போலீஸ் உடையில் இருக்கும் ரஜினியை லதா சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.