சினிமா செய்திகள்

ஒரே தலைப்பில் 2 படங்கள் சிவகார்த்திகேயன் படத்துக்கு நோட்டீஸ் + "||" + 2 Movies with the same title For the movie Sivakarthikeyan Notice

ஒரே தலைப்பில் 2 படங்கள் சிவகார்த்திகேயன் படத்துக்கு நோட்டீஸ்

ஒரே தலைப்பில் 2 படங்கள் சிவகார்த்திகேயன் படத்துக்கு நோட்டீஸ்
பி. எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், இவானா ஆகியோரும் நடிக்கின்றனர்.
கே.ஜே.ஆர் பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு ஹீரோ என்று பெயர் வைத்துள்ளனர். பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளது. டிசம்பர் 20-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படத்துக்கு ஹீரோ பெயரை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதே தலைப்பில் விஜய் தேவரகொண்டா, மாளவிகா மோகனன் நடிக்கும் படமொன்றும் தயாராகி வருகிறது. இந்த படத்தை ஆனந்த் அண்ணாமலை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. ஹீரோ தலைப்பை சிவகார்த்தியேன் படத்துக்கு பயன்படுத்துவதை கண்டித்து விஜய் தேவரகொண்டா படக்குழு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து டிரைபல் ஆர்ட்ஸ் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


“விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கு ஹீரோ என்ற தலைப்பை 2017-ம் ஆண்டிலேயே பதிவு செய்து இருக்கிறோம். இந்த தலைப்பை சிவகார்த்திகேயன் படத்துக்கு பயன்படுத்த கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் கடிதம் அனுப்பிய பிறகும் அதை மீறி பயன்படுத்தி வருகின்றனர். எனவே பட நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.”

இதனால் சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.