சினிமா செய்திகள்

அஜித் நடிக்கும் 2 புதிய படங்கள் + "||" + Ajith will act 2 new pictures

அஜித் நடிக்கும் 2 புதிய படங்கள்

அஜித் நடிக்கும் 2 புதிய படங்கள்
மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித்குமார் வக்கீலாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது.
“அஜித் சிறந்த நடிகர் அவருடன் மீண்டும் பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்று போனிகபூர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை வினோத் இயக்குகிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதில் அஜித்குமார் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல். மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் படத்தில் இடம் பெறுகின்றன.


இதில் வில்லனாக நடிக்க அருண்விஜய் பரிசீலிக்கப் படுவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இது உறுதிப்படுத்தப்படவில்லை. படப் பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இன்னொரு புதிய படத்திலும் அஜித் நடிக்க உள்ளதாகவும் இரண்டு படங்களின் படப் பிடிப்புகளிலும் ஒரே நேரத்தில் நடிப்பது குறித்து ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அஜித்குமாரிடம் இயக்குனர்கள் மகிழ் திருமேனி, புஷ்கர்-காயத்ரி, அஸ்வின், கார்த்திக் நரேன் ஆகியோர் கதை சொல்லி இருக்கிறார்கள். இவர்களில் ஒருவரது படத்தில் அவர் நடிப்பார் என்று தகவல் பரவி வருகிறது.