சினிமா செய்திகள்

அக்‌ஷய்குமார்-பாபி தியோலுடன் ‘ஹவுஸ்புல்-4’ + "||" + Akshay Kumar-Bobby Deol House Full-4

அக்‌ஷய்குமார்-பாபி தியோலுடன் ‘ஹவுஸ்புல்-4’

அக்‌ஷய்குமார்-பாபி தியோலுடன் ‘ஹவுஸ்புல்-4’
‘ஹவுஸ்புல்-4’ என்ற படத்தில் அக்‌ஷய்குமார், ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.
இந்தி பட உலகில், மூன்று அல்லது நான்கு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது புதுசு அல்ல. அந்த ‘சீசன்’ அங்கு 1970-களிலேயே தொடங்கி விட்டது. ‘ஹவுஸ்புல்-4’ என்ற படத்தில் அக்‌ஷய்குமார், ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடிகளாக பூஜா ஹெக்டே, கிருதி சனோன், கிருதி கர்பண்டா ஆகியோர் நடித்துள்ளனர்.

சதி மற்றும் பழிவாங்கல் காரணமாக காதலர்கள் 6 பேரும் பிரிந்து, பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக் கிறார்கள். இருப்பினும் தற்போதைய வாழ்க்கையில், 3 கதாநாயகர்களும் தங்களின் ஜோடிகளை மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

6 பேர்களும் தங்களின் கடந்த கால காதல் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறார்களா? இல்லையா? அப்படி மாற்றி மணந்ததன் விளைவுகள் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது கதை. இந்த நகைச்சுவை படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அக்‌ஷய்குமார் மேலும் ரூ.3 கோடி உதவி
கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவை உலுக்கி வருகிறது.