சினிமா செய்திகள்

இந்தியில் காஞ்சனா படம் திருநங்கையாக அக்‌ஷய்குமார் + "||" + Kanchana movie in hindi Akshay Kumar is transgender

இந்தியில் காஞ்சனா படம் திருநங்கையாக அக்‌ஷய்குமார்

இந்தியில் காஞ்சனா படம் திருநங்கையாக அக்‌ஷய்குமார்
லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா’ படம் 2011-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது.
இந்த படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல லாபம் பார்த்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் தயாராகிறது.

இந்த படத்தில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். லாரன்ஸ் இயக்குகிறார். படப்பிடிப்பில் தயாரிப்பாளருடன் மோதல் ஏற்பட்டு லாரன்ஸ் விலகினார். பின்னர் சமரச பேச்சுக்கு பின் மீண்டும் இயக்க சம்மதித்தார். காஞ்சனா படத்தில் திருநங்கையாக சரத்குமார் நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அவரது கதாபாத்திரத்தில் இந்தியில் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


காஞ்சனா படத்தில் லாரன்ஸ் சில காட்சிகளில் திருநங்கையாக வருவார். இதுபோல் இந்தியில் அக்‌ஷய்குமாரும் சில காட்சிகள் திருநங்கையாக நடிக்கிறார். தனது திருநங்கை தோற்றத்தை அக்‌ஷய்குமார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். “பெண் தெய்வத்தை வணங்குவதுதான் நவராத்திரி. இந்த நல்ல நாளில் எனது லட்சுமி தோற்றத்தை பகிர்கிறேன். இந்த கதாபாத்திரத்தை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். அதே நேரம் பதற்றமாகவும் உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

லட்சுமி பாம் படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் 5-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.