சினிமா செய்திகள்

ஆரோக்கியத்தில் ஜான்வி கபூர் ஆர்வம் + "||" + Health in Janhvi Kapoor the interested

ஆரோக்கியத்தில் ஜான்வி கபூர் ஆர்வம்

ஆரோக்கியத்தில் ஜான்வி கபூர் ஆர்வம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தடக் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தந்தை போனிகபூர், தங்கை குஷிகபூருடன் அமெரிக்கா சென்றார்.

அங்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதன் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜான்வி கபூர் அளித்த பேட்டி வருமாறு:-


“நான் படப்பிடிப்பில் இருந்து தற்போது ஓய்வு எடுத்து இருக்கிறேன். ஆனாலும் உடற்பயிற்சிக்கு ஓய்வு கொடுக்கவில்லை. ஆரோக்கியம் முக்கியம். எனது அம்மாவும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார். எனது தாய் ஐம்பது வயதை தாண்டியவர் என்று யாரும் நம்ப முடியாது. அந்த அளவுக்கு உடம்பை அழகாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்து இருந்தார். அவருடைய மகளான எனக்கும் உடற்பயிற்சிகளில் ஆர்வம் இருக்கிறது. அதனால்தான் உடற்பயிற்சியில் எப்போதும் ஈடுபாடு காட்டுகிறேன். ஜிம்மில் இருக்கவே அதிகம் பிடிக்கிறது. தற்போது பெண் பைலட் குஞ்சன் சக்சேனா வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறேன். இது எனக்கு முக்கிய படமாக இருக்கும்.”

இவ்வாறு ஜான்வி கபூர் கூறினார்.