ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி


ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி
x
தினத்தந்தி 4 Oct 2019 11:18 PM GMT (Updated: 4 Oct 2019 11:18 PM GMT)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் படமாகிறது.

தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக வந்த பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக அவர் பரதநாட்டியம் மற்றும் தமிழ் கற்று வருகிறார். ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்தி பதிப்புக்கு ‘ஜெயா’ என்று தலைப்பு வைத்தனர். ஆனால் கங்கனா ரணாவத் பெயரை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் இந்தியிலும் தலைவி பெயரிலேயே தயாராகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்தது.

எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளனர். இவர் ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். படத்துக்கான திரைக்கதையை விஜயேந்திரபிரசாத் எழுதுகிறார். பாகுபலி படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதி இருந்தார். விஷ்ணு இந்தூரி, சைலேஷ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் ரூ.20 கோடி சம்பளம் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் இயக்குனர் பிரியதர்ஷினியும் த அயன் லேடி என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.

Next Story