சினிமா செய்திகள்

வசூல் குவிக்கும் புதிய படங்கள் + "||" + New movies of collections

வசூல் குவிக்கும் புதிய படங்கள்

வசூல் குவிக்கும் புதிய படங்கள்
சமீப காலமாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் வெளி மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் நல்ல வசூல் பார்க்கின்றன.
சைரா நரசிம்ம ரெட்டி , நம்ம வீட்டு பிள்ளை, ஜோக்கர் - இந்தி படங்களுக்கு மட்டுமே இதுவரை உலகளாவிய மார்க்கெட் இருந்தது. சமீப காலமாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் வெளி மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் நல்ல வசூல் பார்க்கின்றன. அதுபோல் அவெஞ்சர்ஸ், ஸ்பைடர்மேன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வசூல் வேட்டை நடத்தி உள்ளன.


பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து ஆயுதபூஜை விடுமுறை நாட்கள் வருவதால் இந்த படம் ரூ.65 கோடி வரை வசூல் குவிக்கும் என்கின்றனர். சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்போடு தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ரூ.200 கோடி செலவில் எடுத்த இந்த படத்துக்கு செலவிட்ட தொகை கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுப்பினர். ஆனால் இந்த படம் உலகம் முழுவதும் 2 நாட்களில் ரூ.82 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.45 கோடி வசூலித்துள்ளது.

ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப், வாணிகபூர் நடித்து தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான வார் படம் முதல் நாளிலேயே ரூ.53.35 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. ஹாலிவுட் ஜோக்கர் படத்துக்கு இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஜோக்கர் திரைக்கு வந்த முதல் நாளிலேயே ரூ.7.5 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ரூ.50 கோடி வரை வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.