சினிமா செய்திகள்

பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட கேத்தரின் + "||" + For the Movie opportunity Published by Photo actress catherine tresa

பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட கேத்தரின்

பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட கேத்தரின்
நடிகைகள் சிலர் வெளிநாடுகளில் அரைகுறை ஆடையில் சுற்றும் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்தி நடிகைகள் மத்தியில் இந்த வழக்கம் அதிகமாக பரவி தென்னிந்திய நடிகைகளையும் தாக்கி உள்ளது. இப்படி கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது கலாசாரத்துக்கு எதிரானது என்று விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பொதுமேடையிலேயே இதனை கண்டித்த சம்பவம் நடந்தது. பட வாய்ப்புக்காகவே நடிகைகள் கவர்ச்சி உடைகள் அணிவதாகவும் விமர்சித்தார். இந்த நிலையில் குடும்ப பாங்காக இதுவரை நடித்து வந்த நடிகை கேத்தரின் தெரசாவும் நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.


இவர் மெட்ராஸ், கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு-2, நீயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. சக நடிகைகளுக்கு பெரிய கதாநாயகர்கள் ஜோடியாக நடிக்கவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன.

ஆனால் கேத்ரின் தெரசாவை முன்னணி கதாநாயகர்கள் ஒதுக்கிறார்கள். இதனால் நீச்சல் உடை கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.