சினிமா செய்திகள்

இலியானாவுக்கு வந்த பக்குவம் + "||" + For Actress Ileana The maturity

இலியானாவுக்கு வந்த பக்குவம்

இலியானாவுக்கு வந்த பக்குவம்
தமிழில் ‘கேடி’ படத்தில் அறிமுகமான இலியானாவுக்கு விஜய் ஜோடியாக நடித்த ‘நண்பன்’ படம் பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பிறகு இந்தி, தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார்.
நடிகை இலியானா இந்தி, தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“வயதை பொறுத்தே முடிவுகள் எடுக்கும் அனுபவம் வரும். சினிமா துறைக்கு வந்த புதிதில் கிடைத்த கதைகளில் எல்லாம் நடித்தேன். 10 ஆண்டுகளாக அப்படித்தான் செய்தேன். தெலுங்கில் அறிமுகமாகி தமிழ், இந்தி என்று எல்லா மொழி படங்களிலும் வந்தேன். ஆனால் இப்போது முதிர்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறேன்.


எந்த மாதிரி கதைகளில் நடித்தால் ரசிகர்கள் மனதில் நிலைத்து இருக்க முடியும் என்று கதைகள் தேர்வில் பக்குவம் வந்து இருக்கிறது. சினிமாவில் 10 ஆண்டுகள் நீடிப்பது என்பதெல்லாம் இப்போது சாதாரணமாகி விட்டது. முன்பெல்லாம் சாவித்திரி உள்ளிட்ட சில நடிகைகள் அதிக ஆண்டுகள் நடித்தனர்.

அதற்கு பிறகு நடிகர்களுக்குத்தான் நீண்ட காலம் நிலைத்து இருக்கிற வாய்ப்புகள் இருந்தன. நடிகைகளுக்கு இல்லை. ஆனால் இப்போது நிறைய நடிகைகள் 10 ஆண்டுகள் கடந்த பிறகும் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனது பயணமும் அப்படித்தான் இருக்கிறது. தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் வருகின்றன.

ரசிகர்கள் மனதில் வைத்துக்கொள்கிற மாதிரி கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.” இவ்வாறு இலியானா கூறினார்.