சினிமா செய்திகள்

புதிய படத்துக்கு தயாராகிறார் வைரலாகும் அஜித் இளமை தோற்றம் + "||" + Getting ready for the new film is viral Ajith looks youthful

புதிய படத்துக்கு தயாராகிறார் வைரலாகும் அஜித் இளமை தோற்றம்

புதிய படத்துக்கு தயாராகிறார் வைரலாகும் அஜித் இளமை தோற்றம்
அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.  போனிகபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாகிறது. இதர நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

அதிரடி சண்டை கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்பந்தய காட்சிகள் இடம்பெறுகின்றன. மங்காத்தா, என்னை அறிந்தால், விவேகம் படங்களுக்கு பிறகு புதிய படத்திலும் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். முந்தைய படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருந்த அவர் புதிய படத்துக்காக தலைமுடியை கருப்பாக்கி இளமையாக மாறியுள்ளார்.

விமான நிலையத்துக்கு சென்ற அஜித்குமாரை சிலர் செல்போனில் படம்பிடித்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 10 வருடங்களுக்கு முன்பு பார்த்த அஜித்தை போலவே இருக்கிறார் என்றும் புதிய படம் ஸ்டைலாக இருக்கும் என்றும் ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள்.

இளமை தோற்றத்துக்கு மாறியுள்ள அஜித்குமார் டெல்லியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் கலந்து கொண்ட படங்களும் வெளியாகி உள்ளன. பயிற்சி மையத்தில் உள்ளவர்களுடன் ஆலோசனை நடத்துவதுபோலவும் துப்பாக்கியால் சுட தயாராக நிற்பது போன்றும் இந்த படங்கள் உள்ளன.