சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி + "||" + At Rajinikanth house Navratri

ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி

ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி
நடிகர்-நடிகைகள் பலர் வீடுகளில் நவராத்திரி விழாவை கொண்டாடி வருகிறார்கள். சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாடினர்.
ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பிரபல இயக்குனர் ஹரியின் மனைவி பிரீத்தா, நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா உள்ளிட்ட சிலரை அழைத்து இருந்தனர். அனைவரும் பட்டுப்புடவை அணிந்து கலந்து கொண்டார்கள். நவராத்திரியை முன்னிட்டு ரஜினிகாந்த் வீடு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.


விழாவில் கலந்து கொண்ட அனைவரும் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. சில வாரங்களில் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் படம் திரைக்கு வருகிறது.

தர்பார் படத்தை தொடர்ந்து மீண்டும் புதிய படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளார். சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கி பிரபலமான சிவா ஏற்கனவே ரஜினியை சந்தித்து கதை சொல்லி உள்ளார். அந்த கதை பிடித்துள்ளதாகவும் எனவே அதில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.