சினிமா செய்திகள்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு தமிழ் படத்தை இயக்குகிறார்? + "||" + Will Shah Rukh Khan direct a Tamil film?

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு தமிழ் படத்தை இயக்குகிறார்?

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு தமிழ் படத்தை இயக்குகிறார்?
நடிகர் அஜித், விஜய், தனுஷ் குறித்த ரசிகர்கள் கேள்விக்கு பாலிவுட் நடிகர் ஷாருகான் பதில் அளித்து உள்ளார்.
மும்பை

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். அவர் தனது ஒரு படத்திற்கு சென்னை எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டார். அவர் பெரும்பாலான தமிழ் சூப்பர் ஸ்டார்களுடன் நட்புடன் உள்ளார்.  குறிப்பாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அவருக்கு  நல்ல நண்பர்கள்.  அவரது  ரா.ஒன் படத்தில்  ஒரு கேமியோவுக்காக ரஜினிகாந்த் நடித்தார். தற்போது, விஜய் நடித்த பிகில் படத்தில் ஷாருக் நடிக்கும்  ஒரு கேமியோ கேரக்டர் உருவாக்கக்கூடும் என்று  உறுதிபடுத்தப்படாத செய்திகள்  வருகின்றன.

சமீபத்தில்  ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடியபோது, ஷாருக்கான்  தனது படம் இயக்கும் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பயனர் அவரிடம், “எதிர்காலத்தில் ஒரு தமிழ் திரைப்படத்தை இயக்க உங்களுக்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா?” என்று கேட்டபோது, அவர்  “நிச்சயமாக !! மொழி குறித்த எனது எண்ணம் மிகவும் நல்லது !! ”என கூறினார்.

மேலும் , தமிழ் நட்சத்திரங்களைப் பாராட்டினார். நடிகர் தனுஷ் குறித்து  கருத்து கேட்கும்போது, “நான் அவரை நேசிக்கிறேன்”என்று கூறினார், விஜய்யுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகளை ‘அருமை’ என்றும் விவரித்தார்.அஜித் பற்றிய கேள்விக்கு அவர் எனது நண்பர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நடிகை பலி
கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த பிரபல குணசித்திர நடிகை பலியானார்.
2. மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி
கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவில்லை
3. டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல்!
டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
4. 93 வது ஆஸ்கார் விருதுகள்...3 விருதுகளை வென்ற திரைப்படம் ; முழு விபரம்
93 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என மூன்று முக்கிய விருதுகளை நோமட்லேண்ட் படம் பெற்றுள்ளது.
5. விடைபெற்றார் விவேக்: நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம்
நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.