சினிமா செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண திரண்ட ரசிகர்கள் + "||" + Fans flocked to see Vijay at the shooting site

படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண திரண்ட ரசிகர்கள்

படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண திரண்ட ரசிகர்கள்
படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டார்கள்.
அட்லி இயக்கத்தில் விஜய் தந்தை, மகனாக நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்துள்ளனர். ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அடுத்து மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். 

இது விஜய்க்கு 64–வது படம் ஆகும். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர். விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அவர் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா? நண்பனாக வருகிறாரா? என்பது தெரியவில்லை. அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல். 

பாக்யராஜ் மகன் சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதில் விஜய் பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள திரைப்பட நகரில் பூஜையுடன் தொடங்கியது. 

தற்போது பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பு நடக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டார்கள். விஜய் காரில் வந்து இறங்கியதும் வாழ்த்து கோ‌ஷம் போட்டனர். அவர்களை பார்த்து விஜய் கையசைத்தார். ரசிகர்களால் படப்பிடிப்புக்கு தடங்கல் ஏற்பட கூடாது என்பதற்காக அங்கு பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.