சினிமா செய்திகள்

நடிகர் தர்மேந்திராவுக்கு டெங்கு காய்ச்சல்: 3 நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் + "||" + Dharmendra recuperates from dengue and returns home after being hospitalised

நடிகர் தர்மேந்திராவுக்கு டெங்கு காய்ச்சல்: 3 நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்

நடிகர் தர்மேந்திராவுக்கு டெங்கு காய்ச்சல்: 3 நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்
நடிகர் தர்மேந்திராவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு 3 நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி உள்ளார்.
மும்பை, 

பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா. பாலிவுட் பிரபலமான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பேரனின் புதிய பட விழா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிலையில் தர்மேந்திரா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நோயால் பாதிக்கப்பட்ட அவர் மும்பை கார் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்றார். டெங்கு காய்ச்சலுக்கு 3 நாள் சிகிச்சை பெற்ற பிறகு தர்மேந்திரா வீடு திரும்பி உள்ளார்.

தனது மகன்களும், நடிகர்களுமான சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோருடன் அவர் வீடு திரும்பியதாக மும்பை பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.