சினிமா செய்திகள்

“தமிழ் படத்தில் நடிக்க ஆசை” -ஷாருக்கான் + "||" + Shahrukhn's desire to act in Tamil film

“தமிழ் படத்தில் நடிக்க ஆசை” -ஷாருக்கான்

“தமிழ் படத்தில் நடிக்க ஆசை” -ஷாருக்கான்
தமிழ் படத்தில் நடிக்க ஆசை என்று நடிகர் ஷாருக்கான் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் வெளியாகும் தமிழ் படங்களை தவறாமல் பார்க்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களுடன் நெருக்கமான நட்பும் வைத்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் அட்லியும் ஷாருக்கானும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

ஷாருக்கான் படத்தை அட்லி இயக்கப் போவதாகவும் தகவல் பரவியது. அதனை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. ஷாருக்கான் கடைசியாக நடித்த ஜீரோ படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. அந்த படம் எதிர்பார்த்தபடி வசூல் குவிக்கவில்லை. அதன்பிறகு இதுவரை எந்த படத்துக்கும் அவர் கால்ஷீட் ஒதுக்கவில்லை.

தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் அடிக்கடி கலந்துரையாடுவதை ஷாருக்கான் வழக்கமாக வைத்துள்ளார். தற்போது ரசிகர்களுடன் அவர் உரையாடியபோது அதில் சில தமிழ் ரசிகர்களும் இணைந்து கேள்விகள் எழுப்பினார்கள். விஜய் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு அற்புதமானவர் என்றார்.

அஜித்குமார் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு எனது நண்பர் என்று பதில் அளித்தார். இதுபோல் தனுஷ் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று இன்னொரு ரசிகர் கேள்வி எழுப்ப-அதற்கு நான் நேசிக்கும் நபர் என்றார். எதிர்காலத்தில் நேரடி தமிழ் படத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு நடிப்பேன். ஏன் என்றால் அந்த மொழி எனக்கு மிகவும் பரிச்சயமாகி விட்டது” என்று பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஷாருக்கான், கஜோலுக்கு லண்டனில் சிலை
ஷாருக்கான், கஜோலுக்கு லண்டனில் வெண்கல சிலை நிறுவப்பட உள்ளது.
2. இறந்து கிடந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஷாருக்கான்!
முசாபர்பூர் ரெயில் நிலையத்தில் இறந்து கிடந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்.