சினிமா செய்திகள்

பிகில் படக்குழு வெளியிட்டவிஜய், நயன்தாராவின் புதிய ‘போஸ்டர்’ + "||" + Vijay, Nayanthara's new poster

பிகில் படக்குழு வெளியிட்டவிஜய், நயன்தாராவின் புதிய ‘போஸ்டர்’

பிகில் படக்குழு வெளியிட்டவிஜய், நயன்தாராவின் புதிய ‘போஸ்டர்’
பிகில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
தீபாவளிக்கு திரைக்கு வரும் விஜய்யின் பிகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் விஜய் தந்தை, மகனாக 2 வேடங்களில் வருகிறார். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். அட்லி இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையாக வைத்து படத்தை எடுத்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. டீசர் கடந்த 4-ந்தேதி வெளியாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் வெளியாகதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். டுவிட்டர் ஹேஷ்டேக்கில் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்கள். ஒலி வடிவமைப்பை மெருகேற்ற வேண்டி இருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அத்துடன் பிகில் டிரெய்லர் வருகிற 12-ந்தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்தனர். தீபாவளிக்கு 2 வாரங்களே உள்ளதால் படத்தின் தொழில் நுட்ப பணிகள் ஸ்டுடியோக்களில் இரவு பகலாக முழு வீச்சில் நடக்கின்றன. இந்த பணிகள் முடிந்ததும் தணிக்கை குழுவுக்கு அனுப்ப உள்ளனர்.

இந்த நிலையில் பிகில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அதில் விஜய்யும் அவரை திருமண கோலத்தில் இருக்கும் நயன்தாரா ஓரக்கண்ணால் பார்ப்பது போன்றும் காட்சி உள்ளது. இந்த போஸ்டரில் விஜய் மிகவும் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் வலைத்தளத்தில் மகிழ்ச்சியை வெளியிட்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறையில் விஜய் படப்பிடிப்பு
பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
2. டெல்லி காற்று மாசு: விஜய் படப்பிடிப்புக்கு சிக்கல்
விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு திரைக்கு வந்து ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
3. புதிய படத்தில் நடிக்கும் விஜய் தோற்றம் கசிந்தது
தீபாவளிக்கு திரைக்கு வந்து ரூ.200 கோடி வசூல் குவித்த பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 64-வது படம் ஆகும்.
4. கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது
கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. தயாரிப்பாளர் மாறவில்லை!
‘பிகில்’ படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில், புதிய படத்தில் நடிக்கிறார். இது, அவர் நடிக்கும் 64-வது படம்.