சினிமா செய்திகள்

2002 முதல் 2016 வரை: மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை ஜூலி வழக்கு சினிமாவாக எடுக்க போட்டாபோட்டி + "||" + Malayalam films on Jolly murders announced, Mohanlal-Antony Perumbavoor team up again

2002 முதல் 2016 வரை: மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை ஜூலி வழக்கு சினிமாவாக எடுக்க போட்டாபோட்டி

2002 முதல் 2016 வரை: மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை ஜூலி வழக்கு சினிமாவாக எடுக்க போட்டாபோட்டி
2002 முதல் 2016 வரை மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை செய்த ஜூலியின் வழக்கு சினிமாவாக எடுக்க போட்டி நிலவுகிறது.
திருவனந்தபுரம்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜூலி. மணவாழ்க்கை கசப்பாக இருந்ததால் மாமனாரின் அண்ணன் மகன் சாஜுவை பிடித்திருந்தது ஜூலிக்கு. அவருக்கும் அதே எண்ணம் இருப்பதை அறிந்த ஜூலி, இருவரும் இணைவதற்கு தடையாக இருக்கும் குடும்பத்தை கூண்டோடு முடித்துவிட நினைத்தார்.

அதற்காக நகைப்பட்டறையில் பணிபுரியும் தனது நண்பர் சாஜுவிடம் இருந்து சயனைடு வாங்கியுள்ளார். ஜூலி குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி அனைவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார். ஒரே நேரத்தில் எல்லோரையும் கொலை செய்துவிட்டால் தன்மீது சந்தேகம் வரும் என்பதால் சிறிது கால இடைவெளியில் திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்துள்ளார்.

யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருந்தால்தான் சொத்துகளை தமது பெயருக்கு மாற்ற முடியும் என்பதும் அதற்கு ஒரு காரணம். முதலில் மாமியார் அன்னம்மாவுக்கு 2002ஆம் ஆண்டு மட்டன் சூப்பில் சயனைடை கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் வாந்தி எடுத்த அன்னம்மா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். 2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸையும் 2011ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் அதே பாணியில் கொலை செய்துள்ளார் ஜூலி. திட்டமிட்டபடி எல்லாம் நடந்து கொண்டி ருந்த போது அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவுக்கு ஜுலியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்த அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜூலி 2014ஆம் ஆண்டு மேத்யூவுக்கும் சயனைடு மட்டன் சூப் கொடுக்க பிரச்சினை முடிந்தது. தன்வீட்டில் அனைவரையும் கொலை செய்தபின் ஜூலியின் கவனம் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத பெண் குழந்தையின் மீது திரும்பியது. 2016-ல் அவர்களுக்கும் சயனைடு கலந்த சூப் கொடுத்தபின் 2017ஆம் ஆண்டு ஜூலியும் சாஜுவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். குடும்பத்தினரின் சொத்துகளை தன் பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளார் ஜூலி.

சாஜூவின் மனைவி இறந்து ஒராண்டுக் கூட முடியாத நிலையில் சாஜூவும், ஜூலியும் திருமணம் செய்தது உறவினர்க ளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது முதல் கணவர் ராய் தாமஸின் சகோதரர் தனது குடும்பத்தினரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அவர் வெளிநாட்டில் இருந்ததால் ஜூலியின் சயனைடு சூப்பில் இருந்து தப்பியிருநதார். இதே போல் சாஜுவின் மனைவி சிலியின் உறவினர்களும் புகார் அளிக்க, உயிரிழந்தவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரதேச பரிசோதனை செய்யப்பட்டன. அதன்மூலம் உண்மை வெளிவந்தது. இதுதொடர்பாக ஜூலி, அவரது கணவர் சாஜு, நகைப்பட்டறை ஊழியர் ஆகியோரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் 6 பேரையும் கொலை செய்ததை ஜூலி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சீரியல் கொலை சம்பவம்  கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் கொலை வழக்கில் பிரதான குற்றவாளியான ஜூலி சாஜு  தாமரசேரி நீதித்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் 6 போலீஸ் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து கேரளாவில் 2 திரைப்படங்கள் உருவாகின்றன. த்ரிஷயம் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இப்போது ஒரு த்ரில்லர் கதையை படமாக்கும் முயற்சியில் இருந்தார். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவக்கதை  கிடைத்துள்ளதால், இந்த கதையை படமாக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார். இதில் மோகன்லால் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார்.

இதற்கிடையே, இயக்குனர் ரோனெக்ஸ் பிலிப் இந்த சம்பவத்தை மையமாக வைத்து படம் இயக்குகிறார். கொலபாதக கண்களூ டே ஒன்னர பத்திதண்டு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் டினி டேனியல், கொலைகளைச் செய்யும் பெண்ணாக நடிக்கிறார். அலெக்ஸ் ஜோசப் தயாரிக்கும் இந்தப் படத்தின் போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இன்னொரு  திரைப்படத் தயாரிப்பாளர் அருண் டி மோகன், இந்த தொடர் கொலை வழக்கைத் திரைப்படமாக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறி உள்ளார்.

மம்முட்டியின் சிபிஐ கிரைம் தொடர் சினிமாவின்  ஐந்தாவது பகுதி விரைவில் திரைக்கு வரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த படத்தின் கதைக்களம்  இந்த கிரைம் தொடர்  கொலை வழக்கு கதையாக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது இந்த படத்தில்  மம்முட்டி ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சுஷாந்த் சிங் கொலை வழக்கு: காதலி ரியோ சக்கரபோர்த்தி உள்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
நடிகர் சுஷாந்த் சிங் கொலை வழக்கில் காதலி ரியோ சக்கரபோர்த்தி உள்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது.
2. பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க- நடிகர் சூர்யா
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.
3. நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் - இர்பான் பதான்
நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்து உள்ளார்.
4. யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை
இந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்
5. துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை
துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுவதாக நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.