சினிமா செய்திகள்

‘காவியன்’ என்ற பெயரில் அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் படமாகிறது + "||" + The shocking incident in the United States is movie titled as the 'Kavian'

‘காவியன்’ என்ற பெயரில் அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் படமாகிறது

‘காவியன்’ என்ற பெயரில் அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் படமாகிறது
‘‘உலகிலேயே அதிகமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பட்டியலில், அமெரிக்காவுக்குத்தான் முதல் இடம். அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் அதிகமாக பலியானவர்கள் இந்தியர்கள்தான். இப்படி ஒரு அதிர்ச்சி கலந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘காவியன்’ படத்தை உருவாக்கி இருக்கிறோம்’’ என்கிறார், டைரக்டர் சாரதி.
‘காவியன்’  படத்தை பற்றி அவர் மேலும் கூறியதாவது:- ‘‘எங்கள் படத்தின் பெயரே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ‘காவியன்’ என்ற கவித்துவமான பெயருடன், கனமான கதையோடு களம் இறங்க இருக்கிறோம். அமெரிக்காவில் நடந்த ஒரு அதிர்ச்சி கலந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘காவியன்’ படம் வளர்ந்து இருக்கிறது.

இதில் கதையின் நாயகனாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில், ஷாம் நடிக்கிறார். ‘மனம் கொத்தி பறவை’யில் அறிமுகமான அத்மையா, கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதேவிகுமார் மற்றொரு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக்க, சில ஹாலிவுட் நடிகர்-நடிகைகளும் உடன் நடிக்கிறார்கள்.

இந்திய தொழில்நுட்ப கலைஞர்களோடு ஹாலிவுட் கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர்.’’