சினிமா செய்திகள்

தோல்வியால் பட வாய்ப்புகள் குறைவா? ரகுல் பிரீத் சிங் விளக்கம் + "||" + Movie chances are low? Raghul Preet Singh Description

தோல்வியால் பட வாய்ப்புகள் குறைவா? ரகுல் பிரீத் சிங் விளக்கம்

தோல்வியால் பட வாய்ப்புகள் குறைவா? ரகுல் பிரீத் சிங் விளக்கம்
படங்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு நடிகை ரகுல் பிரீத் சிங் விளக்கமளித்துள்ளார்.
சூர்யாவுடன் ரகுல் பிரீத் சிங் நடித்த என்.ஜி.கே படம் மே மாதம் திரைக்கு வந்தது. தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன்–2 படத்திலும், சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்து வருகிறார். ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘நான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்ததால்தான் பட வாய்ப்புகள் இல்லை என்று சிலர் பேசுகிறார்கள். சினிமாவுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்துக்கு எனக்கு கிடைத்து விட்டது. வந்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தினேன். அதனால் தோல்வி படங்களிலும் நான் இருக்க வேண்டியது ஆகிவிட்டது. இந்தியில் சினிமா வாய்ப்புகள் அதிகம் வந்ததும் தென்னிந்திய படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம். ஆனாலும் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

இப்போது கதைகள் தேர்வு செய்வதில் பக்குவமும், முதிர்ச்சியும் வந்து இருக்கிறது. சும்மா நான்கு பாடல் காட்சிகளில் மட்டும் வந்து விட்டு போவதில் எனக்கு விருப்பம் இல்லை. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். தெலுங்கில் அனைத்து முன்னணி கதாநாயர்களுடன் ஜோடியாக நடித்துள்ளேன். தமிழிலும் பெரிய கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து விட்டேன்.  இந்தியில் ரன்வீர் சிங்குடனும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடனும் சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறது.’’

இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா ஊரடங்கில் ‘ஆஸ்கார் விருது படங்களை பார்க்கிறேன் - நடிகை ரகுல் பிரீத் சிங்
கொரோனா ஊரடங்கில் ‘ஆஸ்கார் விருது படங்களை பார்க்கிறேன் என்று நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.
2. எனது ஆடையை விமர்சித்த கோழைகள் ரகுல் பிரீத் சிங் சாடல்
தான் அணிந்த உடை குறித்து எல்லை மீறி ஆபாசமாக விமர்சித்தவரை நடிகை ரகுல் பிரீத் சிங் சாடயுள்ளார்.