சினிமா செய்திகள்

போனிகபூர் தயாரிப்பில் அஜித்குமாரின் மங்காத்தா 2–ம் பாகம்? + "||" + Ajith Kumar's Mankatha Part 2?

போனிகபூர் தயாரிப்பில் அஜித்குமாரின் மங்காத்தா 2–ம் பாகம்?

போனிகபூர் தயாரிப்பில் அஜித்குமாரின் மங்காத்தா 2–ம் பாகம்?
மங்காத்தா 2–ம் பாகத்தை வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்குமாரை நடிக்க படத்தை தயாரிப்பது குறித்து போனிகபூர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
தமிழில் ஏற்கனவே எந்திரன், விஸ்வரூபம், சிங்கம், சண்டக்கோழி, சாமி, திருட்டுப் பயலே, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா நடித்து 2011–ல் வெளியாகி வசூல் குவித்த மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ரசிகர்கள் வற்புறுத்தினர்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு கூறும்போது மங்காத்தா–2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மீண்டும் அஜித் படத்தை இயக்குவேன். அது மங்காத்தா 2–ம் பாகமா அல்லது வேறு கதையா என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றார். சில மாதங்களுக்கு முன்பு அஜித்குமாரையும் நேரில் சந்தித்தும் பேசினார்.

தற்போது மங்காத்தா 2–ம் பாகத்துக்கான கதையை வெங்கட் பிரபு தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் போனிகபூரும், வெங்கட் பிரபுவும் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது மங்காத்தா 2–ம் பாகம் கதையை வெங்கட்பிரபு சொன்னதாகவும் கதை பிடித்துள்ளதால் அஜித்குமாரை வைத்து அந்த படத்தை தயாரிப்பது குறித்து போனிகபூர் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் இன்னொரு படத்தை தயாரிக்கும் பணியில் போனிகபூர் ஈடுபட்டு உள்ளார். இந்த படத்தை முடித்து விட்டு மங்காத்தா 2–ம் பாகத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.