சினிமா செய்திகள்

ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் ஸ்ரேயா? + "||" + Shreya in Rajinikanth's Durbar movie?

ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் ஸ்ரேயா?

ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் ஸ்ரேயா?
தர்பார் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஸ்ரேயா. சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார். விஜய், விக்ரம், ஜெயம் ரவி, விஷால், தனுஷ் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடனும் சேர்ந்து  நடித்துள்ளார்.

கடைசியாக சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் வந்தார். கடந்த வருடம் ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்ட்ரே கோசேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அரவிந்தசாமியுடன் நரகாசுரன் என்ற படத்திலும், ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார். 

இந்த நிலையில் மும்பையில் தர்பார் படப்பிடிப்பு நடந்த அரங்கில் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடன் ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை வைத்து தர்பார் படத்தில் ஸ்ரேயா சில காட்சிகளில் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது. 

ஆனாலும் தர்பார் படத்தில் ஸ்ரேயா நடிப்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. மரியாதை நிமித்தமாகவே ரஜினியை அவர் சந்தித்துள்ளார் என்றும் பேசப்படுகிறது. தர்பார் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

அடுத்த மாதம் படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் தர்பார் திரைக்கு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை - டிடிவி தினகரன்
சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறினார்.
2. கற்பனையாக கூறவில்லை; நடந்ததை சொன்னேன் பெரியார் குறித்த பேச்சு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ ரஜினிகாந்த் திட்டவட்டம்
பெரியார் குறித்து நான் கற்பனையாக கூறவில்லை, நடந்ததைத்தான் சொன்னேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறினார்.
3. முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள் என்று ரஜினி பேச்சுக்கு முரசொலி நாளிதழ் பதில்
முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள் என்று ரஜினி பேச்சுக்கு முரசொலி நாளிதழ் பதில் அளித்துள்ளது.
4. உலக பாக்ஸ் ஆபீஸ் : ரஜினியின் தர்பார் 150 கோடி ரூபாய் வசூலித்து சாதனை...!
150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
5. ரஜினிகாந்த் நடித்த தர்பார் உலகளாவிய முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?
ரஜினிகாந்த் நடித்த தர்பார் உலகளாவிய முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.