சினிமா செய்திகள்

விஜய் நடித்த `பிகில்', தீபாவளிக்கு உறுதி + "||" + Vijay starrer 'Biggle', confirmed for Diwali

விஜய் நடித்த `பிகில்', தீபாவளிக்கு உறுதி

விஜய் நடித்த `பிகில்', தீபாவளிக்கு உறுதி
விஜய் நடித்து, அட்லி இயக்கிய ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வருவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார்.
 ‘வில்லு’ படத்துக்கு பின், இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த படம், இது. விவேக், கதிர், ஜாக்கி ஷராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, மனோபாலா, தேவதர்ஷினி, இந்துஜா, அமிர்தா ஐயர், ரெப்பா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா ஆகியோரும் படத்தில் இடம் பெறுகிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர்.

படத்தில், கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்து இருக்கி றார். பிசியோதெரபிஸ்ட் ஆக நயன்தாரா நடித்துள்ளார். படம், மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி இருக்கிறது. அதற்கு இணையாக வியாபாரமும் ஆகியிருக்கிறது. படம், விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிகில் படக்குழு வெளியிட்ட விஜய், நயன்தாராவின் புதிய ‘போஸ்டர்’
பிகில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
2. விஜய் படப்பிடிப்பு தொடங்கியது
விஜய்க்கு 64-வது படம். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
3. நடிகர் விஜயுடன் இணைகிறார் விஜய் சேதுபதி -அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
4. பிகில் விழாவுக்கு எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது? கல்லூரி நிர்வாகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்பு
பிகில் விழாவுக்கு எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது? என கல்லூரி நிர்வாகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.
5. பேரரசு டைரக்‌ஷனில் விஜய்?
`பிகில்' படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில் நடிக்க இருப்பது தெரிந்த தகவல்.

ஆசிரியரின் தேர்வுகள்...