சினிமா செய்திகள்

"நடித்துவிட்டு மட்டும் போங்கள்... வாயைத் திறந்து பேசாதீங்க" நடிகர் விஜய் குறித்து இயக்குநர் சாமி சர்ச்சை பேச்சு + "||" + Vijay washes hands with Dettol after meeting fans controversial director shocks!

"நடித்துவிட்டு மட்டும் போங்கள்... வாயைத் திறந்து பேசாதீங்க" நடிகர் விஜய் குறித்து இயக்குநர் சாமி சர்ச்சை பேச்சு

"நடித்துவிட்டு மட்டும் போங்கள்... வாயைத் திறந்து பேசாதீங்க" நடிகர் விஜய் குறித்து இயக்குநர் சாமி சர்ச்சை பேச்சு
நடித்துவிட்டு மட்டும் போங்கள்... வாயைத் திறந்து பேசாதீங்க என்று இயக்குநர் சாமி பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.
சென்னை

நடிப்பதோடு நிறுத்திக்கோங்க! விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்! விஜய்யை விமர்சித்து மிருகம் பட இயக்குநர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிகில் படத்தின் இசைவெளிட்டு விழாவில் விஜய் பேசியிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்தால் எல்லாம் சரியாக அமையும் என்று விஜய் பேசியதற்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில்  இயக்குனர் சாமி, விஜய்யை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  'மிருகம்', 'உயிர்’, 'சிந்து சமவெளி' உள்ளிட்ட சர்ச்சைப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சாமி. இறுதியாக 2015-ம் ஆண்டு 'கங்காரு' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது தனது அடுத்தப் படத்துக்கான பணிகளைக் கவனித்து வருகிறார் இயக்குநர் சாமி.

இதனிடையே இவர் விஜய் குறித்து பேசிய வீடியோ பதிவொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், "வணக்கம் விஜய் சார். முன்னாள் இளைய தளபதி விஜய் சார் எப்படி இருக்கீங்க. என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியாது. ஏனென்றால் 4 முறை மட்டுமே சந்தித்துள்ளோம். 3 முறை உங்கள் வீட்டில். உங்கள் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சாருடைய 'தோஸ்த்' படத்துக்கு நான் வசனம் எழுதினேன். அந்தச் சமயத்தில் ஸ்டேட் பாங்க் காலனி வீட்டில் உங்களை 3 முறைச் சந்தித்துள்ளேன்.

அதற்குப் பிறகு ஒரே ஒருமுறை 2 மணி நேரம் 'அன்றில் பறவைகள்' என்ற கதையைச் சொல்லியிருக்கிறேன். இதெல்லாம் 2000-ம் ஆண்டு நடந்தது. நான்தான் 'மிருகம்’, 'உயிர்', 'சிந்து சமவெளி', 'கங்காரு' போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய இயக்குநர் சாமி. உங்களிடம் 'அன்றில் பறவைகள்' என்ற குடும்பக் கதையைச் சொல்ல வந்தேன். அதை நீங்கள் 'ப்ரியமானவளே' படத்தின் ஷூட்டிங்கில்தான் கேட்டீர்கள். சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். பிரச்சினையில்லை.

ரஜினி சார் மாதிரி நடித்துவிட்டு மட்டும் போங்கள். வாயைத் திறந்து பேசாதீங்க ப்ளீஸ். ஏனென்றால் நீங்கள் பேசுவதால் உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறீர்கள். 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, யாரை எங்கு வைக்கணுமோ அங்கு வைக்கணும் என பேசினீர்கள். அப்படியென்றால் கடவுள் உங்களை எங்கு வைத்துள்ளாரோ, அங்குதான் வைத்துள்ளார். நீங்கள் தேவையில்லாமல் வாயைத் திறந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் மாட்டிக் கொள்கிறீர்கள். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

சினிமாவில் அல்ல நிஜ வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் என்பது தெரியும். ரசிகர்களுடன் வாரந்தோறும் போட்டோ எடுத்துக்கொண்டு, என் நெஞ்சில் குடியிருக்கும் தெய்வங்கள் எனப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களுடன் கை கொடுத்துவிட்டு, போட்டோ எடுத்துவிட்டு உள்ளே போய் டெட்டால் போட்டு கை கழுவியதை நானே பார்த்தேன். இது தான் உங்களுடைய உண்மையான நடிப்பு என அதில் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தி நடிகை பாயல் ரோஹத்கி மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் குடும்பம் குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக இந்தி நடிகை பாயல் ரோஹத்கி மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் 168-வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்... இயக்குநர் இவரா?... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
3. எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன- நடிகை கங்கனா ரனாவத்
எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என நடிகை கங்கனா ரனாவத் கோவையில் பேட்டி அளித்தார்.
4. 2002 முதல் 2016 வரை: மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை ஜூலி வழக்கு சினிமாவாக எடுக்க போட்டாபோட்டி
2002 முதல் 2016 வரை மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை செய்த ஜூலியின் வழக்கு சினிமாவாக எடுக்க போட்டி நிலவுகிறது.
5. மதுவுக்கு அடிமையாக இருந்தேன் நடிகை சுருதிஹாசன் ஓப்பன்
மதுவுக்கு அடிமையாக இருந்தேன் என நடிகை சுருதிஹாசன் கூறி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...