சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரருடன் நடிகை அஷ்ரிதா திருமணம்? + "||" + Actress Ashrida gets married to cricketer

கிரிக்கெட் வீரருடன் நடிகை அஷ்ரிதா திருமணம்?

கிரிக்கெட் வீரருடன் நடிகை அஷ்ரிதா திருமணம்?
நடிகை அஷ்ரிதாவுக்கும் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகைகளையும், கிரிக்கெட் வீரர்களையும் இணைத்து காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது நடிகை அஷ்ரிதா ஷெட்டியும் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஷ்ரிதா ஷெட்டி தமிழில் சித்தார்த் ஜோடியாக உதயம் என்.எச்.4, அருள்நிதியுடன் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், கவுதம் கார்த்திக் ஜோடியாக இந்திரஜித் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது நான்தான் சிவா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு துளு படத்திலும் நடித்துள்ளார். அஷ்ரிதா ஷெட்டிக்கும் மனிஷ் பாண்டேவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் வெளி உலகத்துக்கு தெரியாமலேயே இருந்தது. தற்போது மனிஷ் பாண்டே உறவினர்கள் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடப்பதாகவும் அடுத்த மாதம் மும்பையில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான டி20 தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க வசதியாக திருமணத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.