சினிமா செய்திகள்

இந்தி நடிகை பாயல் ரோஹத்கி மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு + "||" + Police Case Against Actor Payal Rohatgi Over Objectionable Comments

இந்தி நடிகை பாயல் ரோஹத்கி மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு

இந்தி நடிகை பாயல் ரோஹத்கி மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் குடும்பம் குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக இந்தி நடிகை பாயல் ரோஹத்கி மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை

பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கி 20க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், மோதிலால் நேரு குறித்தும், ஜவகர்லால் நேரு பற்றியும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜவகர்லால் நேரு மனைவியின் நடத்தை குறித்து அவதூறு பரப்பப்பட்டிருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும், கருத்துக்களையும் நடிகை பாயல் ரோஹத்கி பதிவு செய்திருந்ததாகவும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், 66 மற்றும் 67 ஆகிய பிரிவுகளில் நடிகை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்ட்டர்: சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?
ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்ட்டர் குறித்து சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
2. சகோதரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை
சகோதரி ஷாகீன் பட்டின் புத்தகம் குறித்து பேசும்போது பிரபல நடிகை ஆலியா பட் கண்ணீர் விட்டார்.
3. சிக்கென்ற உடல் ... கிக்கான போஸ்... 47 வயதில் வாய்ப்பு தேடும் நடிகை
சிக்கென்ற உடல் ... கிக்கான போஸ்... என 47 வயதில் நடிகை மந்த்ரா பேடி வாய்ப்பு தேடி வருகிறார்.
4. ’சுசி லீக்ஸ்’ போல் ’சுசி குக்’ யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் சுசித்ரா
பாடகி சுசித்ரா சுசி குக் யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறார்.
5. மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று சினிமா படத்தில் நடிக்கும் டாப்சி பன்னு
கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று சினிமா படத்தில் நடிகை டாப்சி பன்னு நடிக்கிறார்.