சினிமா செய்திகள்

தீபிகா படுகோனேவை உலுக்கிய கதாபாத்திரம் + "||" + The character that rocked Deepika Padukone

தீபிகா படுகோனேவை உலுக்கிய கதாபாத்திரம்

தீபிகா படுகோனேவை உலுக்கிய கதாபாத்திரம்
டெல்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணை குட்டா என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். அதற்கு லட்சுமி அகர்வால் மறுத்ததால் அவர் முகத்தில் திராவகம் வீசினார்.
2005-ல் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்குக்கு பிறகுதான் சுப்ரீம் கோர்ட்டு கடைகளில் திராவகம் விற்பதை தடை செய்தது.

லட்சுமி அகர்வால் வாழ்க்கை ‘சப்பாக்’ என்ற பெயரில் திரைப்படமாகி உள்ளது. மேக்னா குல்சார் இயக்கி உள்ளார். இதில் லட்சுமி அகர்வால் வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். திராவகம் வீச்சில் முகமே மாறியதுபோன்ற தீபிகா படுகோனே தோற்றம் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. இந்த படத்தில் நடித்தது குறித்து தீபிகா படுகோனே கூறியதாவது:-

“சப்பாக் கதையும், கதாபாத்திரமும் என்னை உலுக்கியது. இதில் நடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். மேக்கப் போட மூன்று மணிநேரம் ஆனது. அதை அகற்றுவதற்கு ஒரு மணிநேரம் பிடித்தது. இதனால் மிகவும் களைப்பாக இருந்தது. முந்தைய படங்கள் எதிலும் இவ்வளவு கஷ்டப்பட்டது இல்லை.

படப்பிடிப்பு இறுதிநாளில் எனது ஒப்பனையை கலைத்து அவற்றை ஒரு இடத்தில் போட்டு எரித்தேன். அதன்பிறகுதான் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வந்த உணர்வு ஏற்பட்டது.”

இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தீபிகா படுகோனே - அலியாபட் மோதல்
மும்பையில் நடந்த திரைப்பட நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க கணவர் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோனே சென்று இருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, அலியாபட் உள்பட மேலும் சில நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
2. வைரலாகும் சர்ச்சை வீடியோ: தீபிகா படுகோனே போதை பொருள் பயன்படுத்தினாரா?
இந்தி பட உலகில் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் கரண் ஜோகர், மும்பையில் நடிகர்-நடிகைகளுக்கு விருந்து கொடுத்தார்.
3. கிரிக்கெட் படத்தில் சில காட்சிகளில் நடிக்க தீபிகா படுகோனேவுக்கு ரூ.14 கோடி சம்பளம்
ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பத்மாவத் படத்தில் ராணி பத்மினியாக நடித்து சர்ச்சையில் சிக்கினார்.