சினிமா செய்திகள்

“ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை” - பிரியங்கா சோப்ரா + "||" + "The desire to acting James Bond role" - Priyanka Chopra

“ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை” - பிரியங்கா சோப்ரா

“ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை” - பிரியங்கா சோப்ரா
ஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதன் வரிசையில் 25-வது படமாக நோ டைம் டூ டை தயாராகிறது.
 ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே நான்கு முறை ஜேம்ஸ் பாண்டாக நடித்து இருந்த பியர்ஸ் ப்ரோஸ்னன் கூறும்போது, “இனிமேல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்தான் நடிக்க வேண்டும்” என்றார். இந்த நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்துக்கு நடிகை லஷானா லின்ச் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவருக்கு போட்டியாக ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவும் விரும்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக எனக்கு ஆசை உள்ளது. ஜேம்ஸ் பாண்ட் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன். அந்த வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன். ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த முதல் நடிகை என்ற பெயரும் எனக்கு கிடைக்கும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் ஒரு நடிகை ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க வேண்டும்”

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி
பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி மதிப்பிலானது என்று தகவல் வெளியாகி உள்ளது.
2. என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் - பிரியங்கா சோப்ரா
என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
3. மெட் காலா நிகழ்ச்சி: பிரியங்கா சோப்ராவிற்கு மேக்கப் போட்ட சிறுமி
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது வீட்டிலேயே மெட் காலா பேஷன் நிகழ்ச்சியை சிறுமியை வைத்து சிம்பிளாக நடத்தியுள்ளார்.
4. நம் அனைவரையும் இணைக்கும் பாலமாக இந்த பூவுலகம் இருக்கிறது - பிரியங்கா சோப்ரா
நம் அனைவரையும் இணைக்கும் பாலமாக இந்த பூவுலகம் இருக்கிறது என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
5. பயத்தில் பிரியங்கா சோப்ரா
கொரோனா வைரஸ் பயத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கிறேன் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.