சினிமா செய்திகள்

‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட் + "||" + DMK Leader MK stalin Praises Asuran Movie

‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்

‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்
‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,

நாங்குநேரி தொகுதியில் நேற்று இரவு வரை காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்தார். பிரசாரத்தை முடித்து கொண்டு அவர் நேற்று இரவு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். திடீரென்று கட்சி நிர்வாகிகளை அழைத்த அவர், நடிகர் தனு‌‌ஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பார்க்க விரும்புவதாக கூறினார். உடனடியாக கட்சி நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இதையடுத்து அவர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள 'அசுரன்' படத்தின் இரவு 2- வது காட்சிக்கு சென்றார். அந்த படத்தை கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து அவர் ரசித்து பார்த்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஜெகன் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த நிலையில், இன்று மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் அசுரன் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டு உள்ளது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சுஜித்தை மீட்க தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
2. முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் -ஸ்டாலின்
தற்போது முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலமே அல்ல என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. பாஜக நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கலைத்துவிடும்! -ஸ்டாலின் பிரசாரம்
பாஜக நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கலைத்துவிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
4. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி
அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி என மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து உள்ளார்.
5. வசனம் நீக்கப்பட்டது!
தனுஷ் நடித்து, வெற்றிமாறன் டைரக்‌ஷனில், எஸ்.தாணு தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம், ‘அசுரன்.’