சினிமா செய்திகள்

அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி + "||" + And for seeing the asuran To praise For MK Stalin Thanks to actor Dhanush

அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி

அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு  நடிகர் தனுஷ் நன்றி
அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி என மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து உள்ளார்.
சென்னை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலை ஒட்டி, மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அவர் பார்த்து ரசித்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடி சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என அசுரன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றி மாறனுக்கும், படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுசுக்கும் பாராட்டுகள் என மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். 


மு.க. ஸ்டாலின் பாராட்டுக்கு நடிகர் தனுஷ் காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம் என நன்றி தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
2. கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன.? மு.க.ஸ்டாலின் கேள்வி
கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன.? என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3. கொரோனா பாதிப்பு; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்; திமுக தோழமைகட்சி கூட்டத்தில் தீர்மானம்
திமுக தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சி கூட்டத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
4. திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வாயிலாக 16 ஆம் தேதி நடைபெறும்: திமுக அறிவிப்பு
திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வாயிலாக வரும் 16 ஆம் தேதி நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
5. நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவிப்பு
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவித்துள்ளது.