சினிமா செய்திகள்

புதிய படத்தில் விக்ரம் ஜோடி, ஸ்ரீநிதி ஷெட்டி + "||" + In the new film, Vikram pair srinidhi Shetty

புதிய படத்தில் விக்ரம் ஜோடி, ஸ்ரீநிதி ஷெட்டி

புதிய படத்தில் விக்ரம் ஜோடி, ஸ்ரீநிதி ஷெட்டி
விக்ரம் நடிப்பில் கடந்த வருடம் ஸ்கெட்ச், சாமி-2 படங்கள் வந்தன. தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். இந்த படம் ஜூலை மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது.
கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் துருவ நட்சத்திரம் பட வேலைகளில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

அடுத்து டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கி பிரபலமான அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். திகில் படமாக தயாராகிறது. இது அவரது 58-வது படம் ஆகும். இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

கதாநாயகி இல்லாமலேயே படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏற்கனவே பிரியா பவானி சங்கரை கதாநாயகியாக தேர்வு செய்து இருந்தனர். ஆனால் அவர் வேறு படங்களில் பிசியாக நடிப்பதால் விக்ரம் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதனால் வேறு கதாநாயகி தேடி வந்தனர்.

தற்போது நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியை கதாநாயகியாக தேர்வு செய்துள்ளனர். இவர் மங்களூரை சேர்ந்தவர். தமிழ், கன்னட மொழிகளில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய கே.ஜி.எப் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.