சினிமா செய்திகள்

தீபாவளிக்கு 2 நாள் முன்பே வருகிறது விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி 25-ந் தேதி ரிலீஸ் + "||" + Vijay's Biggle is coming 2 days before Diwali Release at Karthi's Kaithi on the 25th

தீபாவளிக்கு 2 நாள் முன்பே வருகிறது விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி 25-ந் தேதி ரிலீஸ்

தீபாவளிக்கு 2 நாள் முன்பே வருகிறது விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி 25-ந் தேதி ரிலீஸ்
விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு முன்பாக வெள்ளிக்கிழமை வெளியிடுமாறு வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் வற்புறுத்தினர்.
இரண்டு நாட்கள் முன்பே வெளியானால் அதிக வசூல் பார்க்க முடியும் என்றும் தெரிவித்தனர். அதனை ஏற்று பிகில், கைதி படங்கள் தீபாவளிக்கு முன்பாக வருகிற 25-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது விஜய், கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தியேட்டர்களில் கட் அவுட் வைக்காமல் கொடி தோரணங்கள் கட்டி அமர்க்களப்படுத்த தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் கோர்ட்டில் நடைபெறும் பிகில் கதை சர்ச்சை வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகில் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இதில் விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் நடித்துள்ளார்.

மகன் விஜய் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். நயன்தாரா, விவேக், கதிர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூப்பிலும் அதிகம் பேர் பார்த்து சாதனை நிகழ்த்தி உள்ளது. கைதி படத்தில் கார்த்தி ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் நிலையத்தில் கைதி சுட்டுக் கொலை: ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர் மனு
எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் கைதி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி சப்-இன்ஸ்பெக்டர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
2. மொராக்கோ நாட்டில் 300 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய அரசர்
முகமது நபி பிறந்த நாளை முன்னிட்டு 300 கைதிகளுக்கு மொராக்கோ நாட்டு அரசர் மன்னிப்பு வழங்கினார்.
3. `பிகில்' ரூ.200 கோடி வசூல்?
விஜய்யின் `பிகில்' படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. இந்த படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் அதிக வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
4. பெண்கள் கால்பந்து விளையாட்டு பின்னணியில் வந்துள்ள அதிரடி படம் 'பிகில்'
மக்களுக்கு நன்மை செய்யும் தாதா ராயப்பனாக விஜய். அவருடைய மகன் மைக்கேலாக வரும் இன்னொரு விஜய் கால்பந்து விளையாட்டு வீரர். மகனை தேசிய போட்டியில் பங்கெடுக்க வைத்து கோப்பையை வாங்க வேண்டும் என்பது ராயப்பன் ஆசை. இதற்காக தனது தாதா கறை படியாமல் வளர்க்கிறார்.
5. ஹாலிவுட் பாணியில் கதாநாயகி மற்றும் பாடல்கள் இல்லாத-விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட படம் கைதி
கார்த்தி பத்து வருட ஜெயில் தண்டனையை முடித்து விட்டு, அவருடைய ஒரே மகளை பார்ப்பதற்கு வெளியே வருகிறார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் பிடித்து வைக்கிறது. அந்த சமயத்தில் போலீசார் பல கோடி மதிப்புள்ள போதை மருந்தை மடக்கி பிடித்து, பாதுகாப்பாக ஒரு கட்டிடத்துக்குள் வைத்து பூட்டுகிறார்கள்.