சினிமா செய்திகள்

மேக்கப் இல்லாமல் நடிக்கிறார்; விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ் + "||" + Acting in without makeup; Keerthi Suresh as sports woman

மேக்கப் இல்லாமல் நடிக்கிறார்; விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்

மேக்கப் இல்லாமல் நடிக்கிறார்; விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்
விளையாட்டை மையமாக வைத்து அதிக படங்கள் தயாராகின்றன. பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை வைத்து வெளியான கனா பெரிய வெற்றி பெற்றது. தெலுங்கிலும் இந்த படத்தை ரீமேக் செய்தனர்.
விஜய்யின் பிகில் பெண்கள் கால்பந்து விளையாட்டு கதை. கீர்த்தி சுரேசும் புதிய படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார்.இதில் நாயகனாக ஆதி நடிக்கிறார். நாகேஷ் கூகுனூர் இயக்குகிறார். இந்த படத்தின் கதாபாத்திரத்துக்காக கீர்த்தி சுரேஷ் கடும் உடற்பயிற்சிகள் செய்து ஒல்லியாக மாறி இருக்கிறார். 

கதாபாத்திரத்துக்காக வீட்டிலும் பயிற்சி எடுத்து வந்தார். தற்போது படத்தில் வரும் கீர்த்தி சுரேசின் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். இந்த படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மேக்கப் இல்லாமல் இருக்கிறார். படம் முழுவதும் மேக்கப் இல்லாமலேயே நடிப்பதாக கூறப்படுகிறது. 

தமிழில் பெண்குயின் என்ற படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார். ஈஸ்வர் கார்த்தி இயக்குகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாக-திகில் படமாக தயாராகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக நடிக்கிறார். பெண்குயின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகி!
டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் ஒரு புதிய படத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் உள்ள படம்.
2. கீர்த்தி சுரேஷ் கைவசம் படங்கள் இல்லாதது ஏன்?
கீர்த்தி சுரேஷ் இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். அவரின் நடிப்பில் வந்த `மகாநடி' படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
3. கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர்கள்
தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
4. மோகன்லால் மகனுடன் நடிக்க மறுப்பு!
மலையாள பட உலகின் ‘சூப்பர் ஸ்டார்’களில் ஒருவரான மோகன்லாலின் மகன் பிரணவ்.
5. கீர்த்தி சுரேசுக்கு பிடித்த உடைகள்
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் தனக்கு பிடித்த ஆடைகள் பற்றி கூறியதாவது:–