சினிமா செய்திகள்

இமயமலைப் பயணம் நன்றாக அமைந்தது- நடிகர் ரஜினிகாந்த் + "||" + Himalayan journey was well done - actor Rajinikanth

இமயமலைப் பயணம் நன்றாக அமைந்தது- நடிகர் ரஜினிகாந்த்

இமயமலைப் பயணம் நன்றாக அமைந்தது- நடிகர் ரஜினிகாந்த்
இமயமலைப் பயணம் நன்றாக அமைந்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை

தர்பார் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் ரஜினிகாந்த், கடந்த 13ந் தேதி இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கு முன்னதாக தன்னை புத்துணர்ச்சி அடையச் செய்யும்விதமாகவும் ஆன்மிகப் பயணமாகவும் ரஜினி இமயமலை சென்றதாக கூறப்படுகிறது. ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் ரஜினி தியானம் மேற்கொண்டார்.

பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய பகுதிகளுக்கு சென்ற ரஜினி அங்குள்ள ஆலயங்களில் வழிபட்டு, தியானம் மேற்கொண்டார். ஒருவார சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவில் சென்னை திரும்பிய அவர், தமது பயணம் நன்றாக இருந்ததாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து நிருபர்கள்  பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் எதற்கும் பதில் அளிக்காமல் இமயமலை பயணம் நன்றாக இருந்ததாக கூறிவிட்டு ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ராம்கோபால்வர்மாவின் அடுத்த திரைப்படம் 'திரில்லர்'; நாயகி அப்சரா ராணி புகைப்படங்கள்
ராம்கோபால் வர்மாவின் அடுத்த கிளு கிளுப்பு திரைப்படம் ’திரில்லர்’ எனவும் படத்தின் நடிகை அப்சரா ராணி எனவும் அறிமுகம் செய்துள்ளார்.
2. இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...? நடிகர் நெப்போலியன்
இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...? என நடிகர் நெப்போலியன பேட்டி அளித்து உள்ளார்.
3. மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன்- திருமணம் குறித்து வனிதா விஜயகுமார்
மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன் என திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் கூறி உள்ளார்.
4. விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்- நடிகை ராதிகா ஆப்தே
விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் குறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறி உள்ளார்.
5. நயன்தாரவுக்கு கொரோனா பாதிப்பா...? விக்னேஷ் சிவன் கோபம்
கொரோனா வதந்தி பரப்பியவர்களுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலடி கொடுத்திருக்கிறார்.