சினிமா செய்திகள்

டாக்டர் பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ்: வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான் + "||" + Harris Jayaraj to receive Doctorate:AR Rahman congratulates in twitter

டாக்டர் பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ்: வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்

டாக்டர் பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ்: வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்
இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டாக்டர் பட்டம் பெற உள்ள நிலையில் அவருக்கு ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகை சோபனா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. நாளை நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் வழங்கப்படுகிறது.

இவர்களுடன் இணைந்து டாக்டர் பட்டம் பெறுவதில் மிகுந்த கௌரவம் என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஆஸ்கார் விருது வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து பல்கலைக்கழகங்கள் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...