சினிமா செய்திகள்

நடிகை மஞ்சிமா மோகனுக்கு அறுவை சிகிச்சை + "||" + For actress Manjima Mohan surgery

நடிகை மஞ்சிமா மோகனுக்கு அறுவை சிகிச்சை

நடிகை மஞ்சிமா மோகனுக்கு அறுவை சிகிச்சை
கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.
சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மஞ்சிமா மோகன் காலில் சமீபத்தில் இரும்பு கதவு இடித்து விபத்து ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சாதாரண காயம் என்று சொல்லி மருந்து வைத்து கட்டியுள்ளனர். ஆனால் இரும்பு துகள்கள் காலிலேயே இருந்ததால் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருக்கிறார். இதுகுறித்து வலைத்தளத்தில் மஞ்சுமா மோகன் கூறியிருப்பதாவது:-


“சில வாரங்களுக்கு முன்பு என் வாழ்க்கையில் ஒரு விபத்து ஏற்பட்டது. இதற்காக சிறிய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு ஒரு மாதம் காலில் கட்டுடன் படுக்கையிலேயே கழித்து வருகிறேன். இதற்கு முன்பு வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான நிலைமை எது என்று கேட்டால் அப்படி எதுவும் இல்லை என்பதுதான் என் பதிலாக இருக்கும்.

ஆனால் இனிமேல் அப்படி சொல்ல முடியாத அளவுக்கு இந்த விபத்து ஏற்பட்டு விட்டது. படுத்த படுக்கையில் இருப்பது எளிதானது இல்லை. இதனால் எனது வேலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. மற்றவர்களுடன் பேச முடியவில்லை. இந்த சூழல் என்னை வலிமையான பெண்ணாக மாற்றி இருக்கிறது. இதுவும் கடந்து போகும்.’‘ இவ்வாறு மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ருமேனியாவில் அறுவை சிகிச்சையின்போது மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்
ருமேனியாவில் அறுவை சிகிச்சையின்போது எதிர்பாராத விதமாக தீ பற்றியது.
2. சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை - தஞ்சையில், அரசு டாக்டர்கள் சாதனை
உணவு குழாய், சுவாசக்குழாய் ஒட்டி அழுகியதால் சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு அளித்து தஞ்சையில் அரசு டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர்.
3. கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை... ஓய்வுக்குப் பிறகு கட்சியினரை சந்திப்பார்
நவம்பர் 22-ம் தேதி கமலுக்கு, காலில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் ஓய்வெடுக்கவுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
4. உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை நடந்தது.
5. நடிகர் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது சகோதரருடன் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தனது சகோதரரை சந்தித்து நலம் விசாரித்தார்.